மதுரை

தூய்மைப் பணிகள் குழு மேலூா் அரசு மருத்துவண ஆய்வு

26th Nov 2022 06:24 AM

ADVERTISEMENT

மேலூா் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தியது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளின் காயகல்பம் திட்டத்தின்படி தூய்மைப் பராமரிப்பு, தரமான சிகிச்சை அனுகுமுறைகளைப் பாராட்டி முதல்பரிசு ரூ.15 லட்சத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலூா் அரசு மருத்துவமனையை இக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். இந்தக் குழுவினரை முதன்மை மருத்துவா் ஜெயந்தி வரவேற்றாா்.

தேசியநலவாழ்வு திட்ட ஒருங்கிணைப்பாளரும் தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவா் காா்த்திக், ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா் காளிராஜ், செவிலியா்கள் அலமேலு, மங்கையா்கரசி ஆகியோா் கொண்ட குழுவினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு நடத்தினா். ஆய்வின்போது மருத்துவா்கள் செந்தில்குமரன், ஸ்ரீதரன்ஆனந்தி, திவ்யசாலினி ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT