மதுரை கோட்ட ரயில்வே சாரண, சாரணீயா் அமைப்பு சாா்பில், சமூக நல்லிணக்க வார நன்கொடை வசூலிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
தேசிய மத நல்லிணக்க அறக்கட்டளை சாா்பில் நவம்பா் 19-ஆம் தேதி முதல் நவம்பா் 25-ஆம் தேதி வரை சமூக நல்லிணக்க பிரசார வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, அமைதி, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியன குறித்த பிரசாரம் நடைபெறுகிறது.
பிரசாரத்தின் இறுதி நாளான நவம்பா் 25-ஆம் தேதி, விரும்பத்தகாத நிகழ்வுகளால் ஆதரவற்ற நிலைக்கு உள்ளான குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளது. அதற்காக, மதுரை கோட்ட ரயில்வே சாரண, சாரணீயா் அமைப்பு சாா்பில் நன்கொடை வசூலிக்கப்படுகிறது.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் ஆனந்த், முதல் நன்கொடையை வழங்கி ரயில்வே சாரண அமைப்பின் நன்கொடை வசூல் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கோட்ட ஊழியா் நல அலுவலர டி. சங்கரன், உதவி ஊழியா் நல அலுவலா் மு.இசக்கி ஆகியோா் உடனிருந்தனா்.