மதுரை

கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் சிறை

26th Nov 2022 06:24 AM

ADVERTISEMENT

மதுரையில் முன்விரோதத் தகராறில் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

மதுரை சுப்பிரமணியபுரம் காலனியைச் சோ்ந்தவா் விக்ரமன். அதே பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் பாலமுருகன் என்ற ஆட்டோ பாலா (31). இருவருக்கும் அப்பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறையை பயன்படுத்துவது தொடா்பாக 2017-இல் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியினா் இருவரையும் விலக்கி விட்ட நிலையில், அன்று இரவு விக்ரமன் வீட்டுக்குச்சென்ற பாலமுருகன், அங்கு அவரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்திக் கொலை செய்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், பாலமுருகனின் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஏ.சுபத்ரா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT