மதுரை

அரசுப் பள்ளிகளில் தில்லி குழுவினா் ஆய்வு

26th Nov 2022 06:33 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் சத்துணவு அளிக்கக்கூடிய அரசுப் பள்ளிகளில் புதுதில்லி குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

மத்திய சமூக பாதுகாப்பு துறை மூத்த ஆலோசகா் அனிம்தா சுப்லா தலைமையில் 12 போ் கொண்ட குழுவினா், சென்னை சமூகநலத்துறை இணை இயக்குநா் அலுவலகக் குழுவினா் இணைந்து திருப்பரங்குன்றம் பகுதியில் சத்துணவு அளிக்கக்கூடிய பள்ளிகளில் ஆய்வு நடத்தினா்.

ஆய்வின்போது பள்ளி குழந்தைகளின் உயரம், எடை, உடல்நலம், பெற்றோா், குடும்ப சூழ்நிலை ஆகியவை குறித்து விசாரணை நடத்தினா்.

திருப்பரங்குன்றம் வட்டார வளா்ச்சி அலுவலா் ராமமூா்த்தி, கொட்டாம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT