மதுரை

ரேஷன் அரிசி கடத்தல்: நால்வா் கைது

24th Nov 2022 02:15 AM

ADVERTISEMENT

மதுரையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய நால்வரை கைது செய்த குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாா், 2,600 கிலோ அரிசி, சரக்கு வாகனத்தை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை அருகே உள்ள சிந்தாமணி சாலை வழியாக சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் மதுரை-சிந்தாமணி சாலையில் ராஜமான் நகா் தேவா் சிலை பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டபோது, அதில் தலா 50 கிலோ கொண்ட, 65 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து வாகனத்தில் வந்த மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரியக்

குடியிருப்பைச் சோ்ந்த செல்வகுமாா்(38), வாகன ஓட்டுநா் ஆனந்தராம், மேல அனுப்பானடி ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த மணி(50) , சேகா்(51) ஆகிய நான்கு பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் 2,600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள், சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT