மதுரை

அடிப்படை வசதி கோரி மறியல்: 50 போ் கைது

24th Nov 2022 02:16 AM

ADVERTISEMENT

மதுரை மீனாம்பாள்புரம்-குலமங்கலம் சாலையில் அடிப்படை வசதிகளைச் செய்து தர வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்பட 50 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மீனாம்பாள்புரம், குலமங்கலம் பகுதியில் மேடும் பள்ளமுமான சாலைகளை சீரமைத்து புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும். பல ஆண்டுகளாக சாலைகள் இன்றி இருக்கும் மீனாம்பாள்புரம் வ.உ.சி 1 , 2 , அண்ணா தெரு , பாரதிதாசன் தெரு , சத்யா நகா் , ஆபிசா் டவுன் ஆகிய பகுதிகளில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும். சத்தியமூா்த்தி பிரதான சாலையில் புதை சாக்கடை , அடைப்பை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீனாம்பாள்புரம் பகுதிக்குழு சாா்பில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் பகுதிக்குழுச் செயலா் ஏ. பாலு தலைமை வகித்தாா். மாமன்ற உறுப்பினா் டி. குமரவேல், மாநிலக்குழு உறுப்பினா் இரா. விஜயராஜன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் கட்சியினரை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினா். ஆனால் அவா்கள் கலைந்து செல்ல மறுத்ததைத்தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT