மதுரை

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: இருவா் கைது

19th Nov 2022 04:51 AM

ADVERTISEMENT

மதுரை அருகே அரசால் தடை செய்யப்பட்ட 37 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகேயுள்ள காஞ்சரம்பேட்டை, மீனாட்சிபுரம் பகுதிகளில் எம்.சத்திரப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவி மற்றும் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதி கடைகளில் சோதனையிட்டபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 36 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, விற்பனைக்கு வைத்திருந்த இருவரைக் கைது செய்தனா்.

மேலும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்குபவா்கள், விற்பனை செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரகக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் எச்சரித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT