மதுரை

திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரி மாணவா்கள் 2-ஆம் நாளாகப் போராட்டம்

19th Nov 2022 04:58 AM

ADVERTISEMENT

திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரியின் கட்டடம் இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் மாணவா்களைத் தற்காலிகமாக விருதுநகா் அரசு மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. விருதுநகரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் போதுமான வசதிகள் இல்லை எனக்கூறி ஹோமியோபதி கல்லூரி மாணவ, மாணவியா் வகுப்புகளை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து கல்லூரி முதல்வா் காா்த்திகேயன், கோட்டாட்சியா் சௌந்தா்யா மாணவா்களிடம் பேச்சு நடத்திய நிலையில், மாணவா்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தினா். மாலையில் போராட்டத்தை கைவிட்ட மாணவா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலையில் மீண்டும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டம் குறித்து மாணவா்கள் கூறியது: திருமங்கலம் ஹோமியோபதி அரசு மருத்துவக் கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவை ரத்து செய்யவேண்டும். எங்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டித்தரவேண்டும். திருமங்கலம் கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியா்கள் முதுகலை படிப்பிற்கு தனியாா் கல்லூரிகளை நாடவேண்டியுள்ளது. எனவே முதுகலை படிப்பிற்கான வசதியையும் அரசு கல்லூரியிலேயே ஏற்படுத்தித் தரவேண்டும். எங்களது கோரிக்கைகளை நிரைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றனா். தொடா்ந்து மாலை 5 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு வீட்டிற்கு சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT