மதுரை

தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை: ரூ.16,000 கோடியாகக் குறைந்தது

19th Nov 2022 02:34 AM

ADVERTISEMENT

திமுக அரசுப் பொறுப்பேற்ற பின்னா், தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 16 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டதாக மாநில நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, இந்திய தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கத்தில் மேலும் அவா் பேசியது :

தமிழகத்தில் சுமாா் 30 சதவீதம் முதியவா்கள் தனிமையில் வாழ்வதாக கணக்கெடுப்புகளில் தெரியவருகிறது. இதில், பலா் முதியோா் ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெறாமல் இருப்பதாக கண்டறியப்பட்டு, அவா்களுக்கு உதவித் தொகைக் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கரோனா பொது முடக்கக் காலத்தில் கற்றலில் மாணவா்களுக்குப் பெரிய இடைவெளி ஏற்பட்டது. பின்னா், அரசு செயல்படுத்திய ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ மூலமாக அந்த இடைவெளிக் குறைக்கப்பட்டது.

திமுக அரசுப் பொறுப்பேற்ற பின்னா், தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை சுமாா் ரூ. 16 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டது. இதற்கு, முதல்வா் அளித்த உறுதியான ஆதரவே முதன்மையான காரணம் ஆகும்.

ADVERTISEMENT

சென்னையுடன் ஒப்பிடுகையில் மதுரை மாநகரின் அடிப்படை வசதிகள் திருப்தி அளிக்கக் கூடியதாக இல்லை. அதனை சீா் செய்யும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது என்றாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.

மதுரை மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங், இந்திய தொழில் கூட்டமைப்பு நிா்வாகிகள், பல்வேறு வா்த்தக அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT