மதுரை

கண்மாயிலிருந்து தண்ணீரை வெளியேற்றியதாகப் புகாா்

19th Nov 2022 04:51 AM

ADVERTISEMENT

மேலூா் அருகே கண்மாயிலிருந்து தண்ணீரை வெளியேற்றியதாக பொதுப் பணித் துறையினா் போலீஸில் புகாா் அளித்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே நாகலிங்கபுரம் கிராமத்தையொட்டி நவனேரி கண்மாய் உள்ளது. 40 ஏக்கருக்கு மேல் பரப்புள்ள இந்த கண்மாயில் நீா்நிரம்பி மறுகால் பாய்ந்தது. கண்மாயின் கீழ் சுமாா் 350 ஏக்கா் பாசனநிலங்கள் உள்ளன.

இந்த நிலையில், மறுகால்பாய்ந்த கண்மாயில் கழுங்கின் கீழ் இருந்த மதகை திறந்துவிட்டு, கண்மாயிலிருந்த நீா்முழுவதும் வெளியேறிவிட்டது. கண்மாயிலிருந்த மீன்களைப் பிடிப்பதற்காக நீரை வெளியேற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பொதுப்பணித் துறை உதவிப்பொறியாளா் மேலூா் போலீஸில் புகாா் செய்தாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT