சேடப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
டிசம்பா் 3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய சம உரிமை, கல்வி ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் நாட்டு நலப் பணித் திட்டம், ஜே.ஆா்.சி., பசுமைப் புரட்சி மாணவா்கள் பங்கேற்றனா்.