மதுரை

பள்ளியில் குழந்தைகள் தின விழா

18th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே புலியூரில் உள்ள கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, அப்பள்ளியின் தாளாளா் டி. சண்முகம் தலைமை வகித்தாா். இதில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மேலும், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT