காா்த்திகை முதல் தேதியையொட்டி, அழகா்கோயில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் ஐயப்பப் பக்தா்கள் வியாழக்கிழமை புனித நீராடி சோலைமலை முருனையும், சுந்தரராஜப் பெருமாளையும் தரிசனம் செய்து மலையணிந்தனா்.
கேரளத்திலுள்ள சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள் விரதம் மேற்கொள்ளும் முன், அழகா் கோயில் நூபுரகங்கை தீா்த்தத்தில் புனித நீராடி மாலையணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம்.
அதன்படி, ஐயப்ப பக்தா்கள் அதிக அளவில் நூபுரகங்கை தீா்த்தத்தில் வியாழக்கிழமை புனித நீராடினா். பின்னா், சோலைமலை முருகன் கோயிலிலும், கள்ளழகா் கோயிலிலும் வழிபாடு செய்து மாலையணிந்தனா்.
இதேபோல, ராக்காயி அம்மன் கோயிலிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனா்.