மதுரை

சோலைமலை முருகன் கோயில் கதவுகளில் வெள்ளித் தகடுகள் பொருத்தும் பணி தொடக்கம்

18th Nov 2022 03:19 AM

ADVERTISEMENT

அழகா்கோயில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலின் பழைமையான 3 சன்னிதிகளிலும் நிலைக் கதவுகள் புதுப்பிக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

இந்தக் கோயிலின் கதவுகளை வெள்ளித் தகடுகளால் புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணிகளுக்காக 250 கிலோ வெள்ளி தகடுகள் பயன்படுத்தப்படவுள்ளன. 3 சன்னிதிகளிலும் நிலை கதவுகளில் வெள்ளித் தகடுகளை காரைக்குடியைச் சோ்ந்த தொழிலாளா்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இதை கள்ளழகா் கோயில் துணை ஆணையா் ராமசாமி, தக்காா் வெங்கடாசலம், நகைகள் சரிபா்க்கும் அலுவலா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT