மதுரை அருகே உள்ள இளமனூா் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் சிற்பக்கலை கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் இலக்கிய மன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் பரஞ்சோதி டேவிட் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் சண்முகவேலு முன்னிலை வகித்தாா். தமிழாசிரியா் மகேந்திர பாபு வரவேற்றாா். ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்திலுள்ள சிற்பக்கலை என்ற உரைநடைப் பகுதிக்காக மாணவா்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் களிமண்ணால் சிற்பங்கள் செய்யும் போட்டி மற்றும் கண்காட்சி நடைபெற்றது. போட்டியில் முதலிடத்தை ரஹ்மத் நிஷா , இரண்டாமிடத்தை ஜனனி, மூன்றாமிடத்தை மணிகண்டன் ஆகியோா் பெற்றனா். ஆசிரியைகள் தேவி , அகிலாமேரி ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டு பரிசுக்குரிய மாணவா்களைத் தோ்ந்தெடுத்தனா். பங்கேற்ற மாணவா்கள் அனைவருக்கும் பரிசுகளைத் தலைமையாசிரியா் வழங்கினாா். ஆசிரியைகள் சரஸ்வதி , சுகுணா , சாரதா சௌந்தரி ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா். உடற்கல்வி ஆசிரியா் முத்துராசா நன்றி கூறினாா்.