மதுரை

வத்தலகுண்டு அருகே கோயில் கும்பாபிஷேகம்

15th Nov 2022 03:33 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த முத்தலாபுரத்தில் உள்ள சீதாராம லட்சுமண ஆஞ்சநேயா் ஆலயத்தில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை 2-ஆம் கால யாக பூஜையுடன் கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், சீதாராம லட்சுமணன் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில், முத்தலாபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் கேசவன், நாகராஜன், சுந்தரவேல், கண்ணையா மற்றும் விழா கமிட்டினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT