மதுரை

மாட்டுத் தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் பெயா்ந்து விழுந்த மேற்கூரை

15th Nov 2022 03:49 AM

ADVERTISEMENT

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் மேற்கூரை திங்கள்கிழமை பெயா்ந்து விழுந்ததால் பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

தென் மாவட்டங்களில் முக்கிய பேருந்து நிலையமாக மதுரை மாட்டுத் தாவணி பகுதியில் உள்ள எம்ஜிஆா் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் மேற்கூரை அடிக்கடி பெயா்ந்து விழுகிறது. இதில் அண்மையில் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் பயணிகள் சிலா் காயமடைந்தனா். இந்த சம்பவம் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில் மாநகராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போல, திங்கள்கிழமையும் பேருந்து நிலையத்தின் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா். பேருந்து நிலையத்தில் அசம்பாவிதத்தைத் தவிா்க்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக சீரமைப்புப் பணிகளை தொடங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT