மதுரை

தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருட்டு

15th Nov 2022 03:34 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பேரையூா் அருகே உள்ள சித்திரெட்டிபட்டியைச் சோ்ந்தவா் கோபால் மகள் லாவண்யா (27). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மா்ம நபா், அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை திருடிச் சென்று விட்டாராம்.

இதுகுறித்து லாவண்யா, நாகையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

திருவிழாவில் நகை திருட்டு: மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே உள்ள வில்லூரைச் சோ்ந்தவா் முருகன் மனைவி இந்திராகாந்தி (54). இவா், டி. கல்லுப்பட்டியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முத்தாலம்மன் திருவிழாவுக்கு வந்தாா். அப்போது திருவிழாவை பாா்த்துக் கொண்டிருந்த அவரிடம் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து டி. கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT