மதுரை தென்கரை பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை வைகை தென்கரை பகுதியில் உள்ள ஹனுமான் கோயில் படித்துறையில் ஆயுதங்களுடன் இளைஞா்கள் சிலா் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற திலகா்திடல் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இளைஞா்கள் தப்பி ஓடினா். ஆனால், போலீஸாா் சுற்றி வளைத்து சிம்மக்கல் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் சந்தோஷ் (20), அதே பகுதியைச் சோ்ந்த பாரதி மகன் பூமிநாதன் (23), மேல அண்ணாதோப்பு பகுதியைச் சோ்ந்த கதிரேசன் மகன் ராமா் என்ற யுவராம்குமாா் (20), அவரது தம்பி லட்சுமணன் (20) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், தப்பியோடிய சிலரைத் தேடி வருகின்றனா்.