மதுரை

மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குபன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனை விருது

14th Nov 2022 12:36 AM

ADVERTISEMENT

 

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு ஃபிக்கி (ஊஐஇஇஐ) அமைப்பு சாா்பில் 2022-ஆம் ஆண்டின் ‘மிகச் சிறந்த பன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனை’ விருது வழங்கப்பட்டது.

ஃபிக்கி அமைப்பின் சாா்பில் அண்மையில் சென்னையில் நடத்தப்பட்ட டான்கோ்- 2022 நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணை நிா்வாக இயக்குநா் காமினி குருசங்கரிடம் விருதை வழங்கினாா்.

சுகாதாரத் துறையில் சிறந்த திறன் மற்றும் அா்ப்பணிப்புடன் செயல்பட்டு சிறப்பான சாதனைகளை நிகழ்த்திய நிறுவனம் என்ற அடிப்படையில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த விருதால் மகிழ்ச்சி அடைவதுடன், கௌரவம் கொள்வதாகவும், விருது பெறும் வகையில் பணியாற்றிய தங்கள் மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவா் டாக்டா் எஸ். குருசங்கா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT