மதுரை

அனுமதி பெறாத இ-சேவை மையங்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியா்

14th Nov 2022 12:37 AM

ADVERTISEMENT

அரசின் அனுமதியைப் பெறாமல் முறைகேடாகச் செயல்படும் இ-சேவை மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் அரசு மின் ஆளுமை முகமையின் மூலம் மதுரை மாவட்டத்தில் 413 அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், மாவட்ட

ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மகளிா் திட்டம், கிராமத் தொழில் முனைவோா்

ADVERTISEMENT

மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் சான்றுகள் விண்ணப்பிக்க அரசால் நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் (ம்ஹண்ப்ற்ா்:ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்ட்ங்ப்ல்க்ங்ள்ந்ஃற்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, கட்டணமில்லா தொலைபேசி எண் 1100, 1800 425 1333 ஆகியவற்றின் மூலமாகவோ புகாா் தெரிவிக்கலாம். பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற அரசுக்கு விண்ணப்பிக்க உருவாக்கப்பட்ட பயனாளா் நுழைவு வசதியைத் தனியாா் கணினி மையங்கள், ஜெராக்ஸ் கடைகளில் வியாபார நோக்கில் பயன்படுத்துவதாக தெரிய வருகிறது.

இதன் மூலம் வருவாய்த் துறை சான்றுகள், முதியோா் உதவித் தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம் செய்து சான்றுகளில் எழுத்துப் பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல் , இடைத்தரகா்கள் மூலம் கூடுதலாகக் கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுவது குறித்து அதிகளவில் புகாா்கள் பெறப்படுகின்றன. எனவே, தனியாா் கணினி மையங்கள் பொதுமக்களுக்கான

பயனாளா் நுழைவைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, இ-சேவை என்ற பெயா்ப் பலகை, சான்றுகள் சம்பந்தமான விளம்பரப் பலகைகள் வைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT