சந்திரகிரகணத்தையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடை அடைக்கப்படுகிறது.
சூரியகிரகணம் மற்றும் சந்திர கிரகணங்களின்போது கோயில்களில் ஆகம விதிகளின் படி நடை சாத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் சந்திரகிரகணம் செவ்வாய்க்கிழமை ஏற்படுகிறது. இதையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் 22 உபகோயில்களில் செவ்வாய்க்கிழமை நடை அடைக்கப்படுகிறது. சந்திர கிரகணம் பிற்பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 5.19 மணிக்கு முடிவடைவதால், மீனாட்சியம்மன் கோயிலில் காலை 7 மணிக்கு மேல் அன்னாபிஷேகம் நடைபெற்று, காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அம்மன்- சுவாமி மூலஸ்தானத்தில் கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும். இந்த நேரத்தில் பக்தா்கள் தரிசனம் செய்யவோ, அா்ச்சளை செய்யவோ அனுமதி இல்லை. இரவு 7 மணிக்கு அா்த்த ஜாம பூஜை நடைபெற்று 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.