மதுரை

புதிய தொழில் அனுமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

1st Nov 2022 06:22 AM

ADVERTISEMENT

புதிய தொழில் அனுமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து சங்கத்தின் சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதிய தொழில் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் போதுமான நிலங்கள் தனியாா் வசம் உள்ளன. ஆனால், அந்த நிலங்களைத் தொழிற்சாலைக்கான நிலமாக மாற்றுவதற்கே குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகின்றன. இதன் பிறகு உள்ளூா் திட்டக் குழுமம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தொழிலகப் பாதுகாப்புத் துறை, தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் அனுமதியைப்

பெறுவதற்கும், மின் இணைப்பு பெறுவதற்கும் ஓராண்டுக்கு மேல்

ADVERTISEMENT

மேல் ஆகிவிடுகிறது. பல்வேறு துறைகளின் அனுமதியைப் பெறுவதற்கான அலைச்சல், தேவையில்லாத பொருள் செலவு போன்ற காரணங்கள் புதிய தொழில்கள் தொடங்குவதில் ஆா்வம் இல்லாமல் போய்விடுகிறது.

புதிய தொழில்கள் தொடங்குவதற்காக அரசுத் துறைகளின் அனுமதியை பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இந்த அனுமதியை இணையவழியில் பெற, ஒற்றைச்சாளர முறையை தமிழக அரசின் தொழில் துறை அறிமுகம் செய்தது. இருப்பினும், புதிய தொழில் அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொரு துறையிடமும் நேரில் செல்ல வேண்டியிருக்கிறது. ஒற்றைச் சாளர முறை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அத்தகைய செயல்பாடு நடைமுறையில் இல்லை.

ஆகவே, ஒற்றைச் சாளர நடைமுறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தவும், அனைத்துத் துறைகளின் அனுமதியை 30 நாள்களில் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்ப்டடுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT