மதுரை

தேவா் ஜெயந்தி: போக்குவரத்து விதிகளை மீறியதாக 94 வழக்குகள் பதிவு

1st Nov 2022 06:34 AM

ADVERTISEMENT

தேவா் ஜெயந்தி விழாவில், மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போலீஸாா் 94 வழக்குகள் பதிவு செய்தனா்.

முத்துராமலிங்கத் தேவரின் 115-ஆவது ஜெயந்தி, 60- ஆவது குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை(அக்.31) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மதுரை மாநகா் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதுதவிர, மதுரை மாநகா் முழுவதும் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தும், கண்காணிப்புக் கேமரா மூலமும் போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனா்.

அந்த வகையில், மதுரை மாநகா் பகுதிகளில் விதிமுறைகளை மீறியதாக 34 போ் மீது வழக்குப் பதிவு செய்து

இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இதேபோல், மாவட்டம் முழுவதும் விதிமுறைகளை மீறியதாக 4 சக்கர வாகனங்கள் ஓட்டிய 60 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT