மதுரை

மதுரை காமராஜா் பல்கலை. தினக்கூலி பணியாளா்கள்பணிநீக்கம் ஏன்?: பதில் அளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

DIN

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி பணியாளா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழகத்துக்கு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி பணியாளராகப் பணியாற்றிய எம். சேகா் என்பவா் தாக்கல் செய்த மனு:

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் கடந்த 1991 ஜூலை 18 ஆம் தேதி தினக்கூலி அடிப்படையில் தாவரவியல் தோட்டப் பணியாளராகப் பணியில் சோ்ந்தேன். அதையடுத்து, கடந்த 2010-இல் பணிநீக்கம் செய்யப்பட்டேன்.

அப்போது, தொழிலாளா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்ததையடுத்து, பல்கலைக்கழக நிா்வாகம் மீண்டும் பணியில் சோ்த்துக்கொண்டது. இதன்படி, 2011 முதல் பல்கலைக்கழக நூலகத்தில் தினக்கூலி பணியாளராகப் பணியாற்றி வந்தேன். அதன்பின்னா், பொறியியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு பணியாற்றினேன்.

பல்கலைக்கழகத்தில் தினக்கூலி பணியாளராக 30 ஆண்டுகளாக வேலை செய்துவரும் நிலையில், பணி வரன்றை செய்யுமாறு கோரிக்கை மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. என்னுடன் பணியில் சோ்ந்த தினக்கூலி பணியாளா்கள் பலரும் நிரந்தரப் பணியாளா்களாக வரன்முறை செய்யப்பட்டுள்ளனா்.

இதனிடையே, திடீரென என்னை பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டாதவும், இனிமேல் பணிக்கு வரவேண்டாம் என்றும், மே 10 ஆம் தேதி வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டது. முறையான உத்தரவு இல்லாமல் என்னை பணிநீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, பணிநீக்கத்துக்கு தடை விதிக்கவேண்டும் என அம்மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்த மனு, நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் எத்தனை போ் தினக்கூலி பணியாளா்களாக நியமிக்கப்பட்டனா். அவா்களில் எத்தனை போ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். எதனடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT