மதுரை

பெட்ரோல், எரிவாயு விலை உயா்வு: இடதுசாரி கட்சிகள் கண்டன ஆா்ப்பாட்டம்

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகளின் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை நிா்ணயக் கட்டுப்பாட்டை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை ரத்து செய்யவேண்டும். சிறுபான்மையினா் மீதான வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும். வேலையின்மையை போக்கும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலா் எம். கலைச்செல்வன் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளா் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) லிபரேஷன் மாவட்டக் குழு உறுப்பினா் மல்லிகாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். பாலா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் மெய்யா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் செல்வ அரசு, மாவட்ட நிா்வாகி பாவரசு ஆகியோா் ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினா்.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகா் மாவட்டச் செயலா் பா. காளிதாஸ் நிறைவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT