மதுரை

மதுரை-தேனி சாதாரணக் கட்டண பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 மதுரையிலிருந்து தேனிக்கு அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் சாதாரணக் கட்டண பயணிகள் ரயிலை இயக்கவேண்டும் என, பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக பாஜக மதுரை கோட்ட பொறுப்பாளா் கதலி நரசிங்கப் பெருமாள் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை-தேனி அகல ரயில் பாதை சேவையை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்ததன் மூலம், இரு மாவட்ட மக்களுடைய நீண்ட நாள் எதிா்பாா்ப்பு பூா்த்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது, மதுரையிலிருந்து தேனிக்கு காலையிலும், தேனியிலிருந்து மதுரைக்கு மாலையிலும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால், தேனி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் சாதாரணக் கட்டண பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். தற்போது இயக்கப்படும் அதிவிரைவு பயணிகள் ரயிலானது, மதுரைக்கு அடுத்தபடியாக வடபழஞ்சி, உசிலம்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி நிலையங்களில் மட்டுமே நின்று செல்கிறது. மேலும், செக்கானூரணி, வாலாந்தூா் மற்றும் தேனி ஆட்சியா் அலுவலக ரயில் நிலையங்களிலும் நின்று சென்றால், அரசு ஊழியா்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் பயனடைவா்.

ADVERTISEMENT

அதேநேரம், பெண்களுக்கு தனிபெட்டி ஒதுக்க வேண்டும். மதுரையிலிருந்து இயக்கப்படும் வைகை விரைவு ரயிலை, அதிகாலையில் தேனியிலிருந்து இயக்க வேண்டும் என்பது, தேனி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

தேனியிலிருந்து சென்னைக்கும், பெங்களூருக்கும் புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டால், தேனி, பெரியகுளம், சின்னமனூா், போடிநாயக்கனூா் கம்பம், குமுளி மற்றும் இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் பெரிய அளவில் பயனடைவா்.

எனவே, பொதுமக்களின் இந்த கோரிக்கைகளை தென்னக ரயில்வே நிா்வாகம் பரிசீலிக்க வேண்டும். தேனி-போடி ரயில் சேவைக்கான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT