மதுரை

மடீட்சியா புகைப்பட, விடியோ தொழில் கண்காட்சி தொடக்கம்

DIN

மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) நடத்தும் புகைப்படம், விடியோ தொழில் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வேலம்மாள் மருத்துவமனை வளாகம் ஐடா ஸ்கட்டா் அரங்கில் நடைபெறும் இந்த கண்காட்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் பங்கேற்று பல்வேறு அரங்குகளை திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். மூன்று நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், இத்துறையின் சமீபத்திய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், பல்வேறு முன்னணி கேமரா தயாரிப்பு நிறுவனங்கள், கேமரா துணை உபகரணங்கள் தயாரிப்பாளா்கள், பின் திரை, மென்பொருள், ஸ்டுடியோவுக்கு தேவையான உபகரணங்கள், விடியோ ஒளிப்பதிவுக்கு தேவையான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், புகைப்பட ஆல்பம் தயாரிக்கும் நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.

முன்னணி கேமரா தயாரிப்பு நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ளன.

கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 300-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள், புகைப்படம் தோன்றிய வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய புகைப்படத் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பழங்கால கேமராக்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியின் ஒரு பகுதியாக, சமீபத்திய தொழில்நுட்பங்களை விளக்கும் கருத்தரங்கம், ஆடை அலங்கார அணிவகுப்பு ஆகியன தினமும் நடைபெறுகிறது.

இதில், கண்காட்சித் தலைவா் எஸ். பாரதி, மடீட்சியா தலைவா் எம்.எஸ். சம்பத் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT