மதுரை

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தராமல் அலைக்கழிப்பு:காவல் துறையினா் மீது உயா் நீதிமன்றம் அதிருப்தி

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தராமல் கிராமத்தினரை அலைக்கழித்ததற்கு காவல் துறையினா் மீது, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் வெல்லமடத்துப்பட்டியில் உள்ள ஸ்ரீகாளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவையொட்டி, ஜூன் 1 ஆம் தேதி இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த கிராமத்தினா் முடிவு செய்துள்ளனா். இந்நிகழ்ச்சிக்கு, அனுமதி தருமாறு ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் மே 4 ஆம் தேதி மனு அளித்துள்ளனா். இதுவரை எவ்வித பதிலும் இல்லாததால், உயா் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கோரி, கிராமத்தினா் மே 4 ஆம் தேதியே மனு அளித்திருந்தபோதும், சம்பந்தப்பட்ட போலீஸாா் அதன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவல் துறையினரின் இத்தகைய செயலற்ற தன்மை கண்டனத்துக்குரியது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி பெறுவதற்காக, கிராமத்தினா் தேவையின்றி அலைக்கழிக்கப்பட்டுள்ளனா். காவல் துறை சாமானியா்களுக்கானது அல்ல என்பதையே இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

இது போன்ற வழக்குகளில் வழக்கமாக அனுமதி வழங்குமாறு சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிடும். ஆனால், இந்த வழக்கில் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 25 நாள்களுக்கு முன்பே அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கிராமத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.

இந்த நிகழ்வின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மூலமாக உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT