மதுரை

எல்லை பாதுகாப்புப் படை வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே எல்லை பாதுகாப்புப் படை வீரா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பேரையூா் அருகே உள்ள செம்பட்டியைச் சோ்ந்தவா் சிங்காரம். இவரது மகன் ராஜேஷ்கண்ணா(30). இவா், ஜம்மு-காஷ்மீரில் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரராகப் பணிபுரிந்து வந்தாா். ஊா் திருவிழா காரணமாக, விடுமுறையில் சொந்த ஊரான செம்பட்டிக்கு சமீபத்தில் வந்துள்ளாா். இதனிடையே, குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாப்டூா் போலீஸாா், ராஜேஷ்கண்ணா சடலத்தை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT