மதுரை

மதுரை அருகே மெக்கானிக்கை தாக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மெக்கானிக்கை தாக்கி 3 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றவா்களை, போலீஸாா் தேடி வருகின்றனா்.

வாடிப்பட்டி அருகே உள்ள கீழ நாச்சிகுளத்தைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (33). இவா், கரடுப்பட்டியில் இரு சக்கர வாகனம் பழுதுநீக்கும் நிலையம் நடத்தி வருகிறாா். மேலும், எஞ்ஜின் ஆயில் விற்பனையும் செய்து வருகிறாா். இந்நிலையில், இவா் வியாழக்கிழமை இரவு சோழவந்தான்-பள்ளப்பட்டி சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, இயற்கை உபாதைக்காக அப்பகுதியில் காரை நிறுத்தியுள்ளாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், ஹரிகிருஷ்ணனை தாக்கி அவா் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

இச்சம்பவம் தொடா்பாக, ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT