மதுரை

சாலையில் கிடந்தவருக்கு புதுவாழ்வளித்த உசிலம்பட்டி அரசு மருத்துவர்கள்

24th May 2022 08:57 AM

ADVERTISEMENT

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இங்கு கடந்த மாதம் 24-ம் தேதி பேரையூர் அருகே பூசலப்புரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தாய், தந்தை இன்றி ஆதரவற்ற நிலையில் நடந்து செல்லும்போது வழிக்கு கீழே விழுந்ததில் இடதுபுற தொடை எலும்பு முறிவு ஏற்பட்டு ஆதரவற்று கிடந்த நிலையில் உசிலம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உசிலம்பட்டி மருத்துவர்கள் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து, ஒரு மாதமாக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நடக்கக் கூடிய அளவிற்கு முன்னேற்றமடைய செய்ததாகவும், மேலும் செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், மேலும் உயர் சிகிச்சைக்காக மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும், இவரிடமிருந்து ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த ஒரு ஆவணமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் டாக்டர் நடராஜன் தெரிவித்தார்.

மேலும், இங்கு 2012-ம் ஆண்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை செய்து சிறப்பு பெற்றதாகும். தைராய்டு மற்றும் உமிழ்நீர் சிகிச்சை சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

பச்சிளம் குழந்தைகள் வார்டில்  இரண்டு மாதத்திற்கு முன்பு 800 கிராம் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்ததில், மூன்று கிலோ வரைக்கும் கொண்டு வந்து ஒரு பெரிய சாதனையை படைத்தது.

தமிழக அளவில் ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது. இது போன்று பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு மருத்துவக் கல்லூரியில் எடுக்க வேண்டிய சிக்கலான அறுவைச் சிகிச்சை முறையை இங்கு சிறப்பான அறுவை சிகிச்சைகளை எடுத்து மிகச்சிறப்பாக சிகிச்சை அளித்து வருவதாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நடராஜன் பேட்டியளித்தார்.

இந்த சிகிச்சையில் உறுதுணையாக டாக்டர்  மணிவண்ணன் நிலைய மருத்துவர், டாக்டர் பாலமுரளி அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் குமார் தலைமை  எலும்பு முறிவு மருத்துவர், டாக்டர் சந்தோஷ் மனநல மருத்துவர், டாக்டர்  ராதாமணி குழந்தைகள் நல மருத்துவர், ஜீவா தலைமை செவிலியர் கண்காணிப்பாளர் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

இதையும் படிக்க: சாலையில் கிடந்தவருக்கு புதுவாழ்வளித்த உசிலம்பட்டி அரசு மருத்துவர்கள்

ADVERTISEMENT
ADVERTISEMENT