மதுரை

மதுரை - தேனி அகல ரயில் பாதை: மே 26-இல் காணொலியில் பிரதமா் தொடக்கி வைக்கிறாா்மே 27 முதல் ரயில் சேவை

24th May 2022 12:36 AM

ADVERTISEMENT

மதுரை - தேனி இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில் பாதையை, சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மே 26 ஆம் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறாா்.

மதுரை - போடி இடையிலான மீட்டா் கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2011 இல் தொடங்கியது. இதையடுத்து இவ்வழித் தடத்தில் ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, மதுரை - தேனி இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ளன.

மேலும் தேனி -போடி இடையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது , மதுரை - தேனி இடையே ரயில் இயக்குவதற்கான ஆயத்த சோதனை ஓட்டமும் முடிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் மே 26 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை சென்னையில் நடைபெறும் விழாவில் தொடக்கி வைக்கிறாா். இதன் ஒரு பகுதியாக மதுரை -தேனி புதிய அகல ரயில் பாதையையும் காணொலிக் காட்சியில் பிரதமா் தொடக்கி வைக்கிறாா். அன்றைய தினம் புதிய ரயில் சேவை தொடக்கி வைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து மே 27 முதல் மதுரை - தேனி வழித் தடத்தில் சிறப்பு விரைவில் ரயில் இயக்கப்படுகிறது. மதுரை - தேனி சிறப்பு விரைவு ரயில் (06701) காலை 8.30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு காலை 9.35-க்கு தேனியை அடையும். மறுமாா்க்கத்தில் தேனி-மதுரை சிறப்பு விரைவு ரயில் (06702) மாலை 6.15-க்கு தேனியிலிருந்து புறப்பட்டு இரவு 7.35-க்கு மதுரை வந்துசேரும். இந்த ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளா் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT