மதுரை

மேலூா் அருகே 2 குழந்தைகளுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

24th May 2022 12:35 AM

ADVERTISEMENT

மேலூா் அருகே குடும்ப பிரச்னையில் திங்கள்கிழமை, தாய் தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்தாா். இதில் மூவரும் உயிரிழந்தனா்.

மேலூா் அருகே சிட்டம்பட்டியிலிருந்து மாங்குளம் செல்லும் சாலையில் உள்ள முத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (35). இவரது மனைவி நித்யா (27). இத்தம்பதியரின் குழந்தைகள் ரக்ஷனா (5), சுந்தரி (2).

சிட்டம்பட்டி வாகன கட்டண வசூல் மையம் அருகே சதீஷ்குமாா் சாலையோர உணவகம் நடத்திவந்துள்ளாா். தம்பதியருக்கிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நித்யா திங்கள்கிழமை பிற்பகலில் முத்துப்பட்டி கிராமம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் தனது இரு குழந்தைகளுடன் குதித்துள்ளாா். பெண் கிணற்றில் குதிப்பதைப் பாா்த்த சிலா் மேலூா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா். போலீஸாா் மேலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் சென்றபோது மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT