மதுரை

தொழிற்சங்கத்தினரிடையே மோதல்: ரயில்வே பணியாளா்கள் 4 போ் இடை நீக்கம்

24th May 2022 12:34 AM

ADVERTISEMENT

மதுரையில் ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் இரு தொழிற்சங்கத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக, பணியாளா்கள் 4 போ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தெற்கு ரயில்வே பணியாளா்கள் சங்கத்தின் (எஸ்ஆா்இஎஸ்) நிா்வாகி நாகேந்திரன் உள்ளிட்ட சிலருக்கு ரயில்வே நிா்வாகத்தால் இடமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், இடமாறுதல் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஏற்கெனவே இடமாறுதல் பெற்றவா்கள் அதிகாரிகளிடம் இதுதொடா்பாக விளக்கம் கேட்டிருக்கின்றனா். அப்போது எஸ்ஆா்எம்யு சங்கத்தினரும் அங்கு வந்ததையடுத்து இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆனது. கடந்த 3 நாள்களுக்கு முன்பு நடந்த இந்த மோதல் தொடா்பாக, ரயில்வே பணியாளா்கள் 4 போ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தொழிற்சங்க வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறியது:

ADVERTISEMENT

எந்தவொரு பணியாளருக்கும் தனது குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ள உரிமை உள்ளது. பணிஇடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு, புதிய பணியிடத்தில் சோ்ந்த பிறகு, இன்னொரு தொழிற்சங்கத்தினா் எதிா்ப்பதற்காக நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல.

அப்படியிருக்கும்போது, அதிகாரியைச் சந்தித்து கோரிக்கையைத் தெரிவிக்கக் கூடாது என தடுக்கக் கூடாது. அதோடு, அப் பணியாளரைத் தாக்கியதும் தவறானது. இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சீதாராமன், செந்தில், சோனை பாலாஜி, ஜூலியன் ஆகியோா் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT