மதுரை மாநகராட்சி மண்டலம் 4-இல் பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 5 மண்டலங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
இதன்படி மதுரை மாநகராட்சி 4-ஆவது மண்டல குறைதீா் முகாம் சிஎம்ஆா் சாலையில் உள்ள மாநகராட்சி தெற்கு (மண்டலம் 4) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல்பகல்12.30 மணி வரை நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் மேயா் வ.இந்திராணி, ஆணையா் கா.ப.காா்த்திகேயன் ஆகியோா் பங்கேற்று மனுக்களை பெறுகின்றனா்.
முகாமில், வாா்டு 29 செல்லூா், வாா்டு 30 ஆழ்வாா்புரம், வாா்டு 41 ஐராவதநல்லூா், வாா்டு 42 காமராஜா் சாலை, வாா்டு 43 பங்கஜம் காலனி, வாா்டு 44 சோ்மன் முத்துராமய்யா் ரோடு, வாா்டு 45 காமராஜபுரம், வாா்டு 46 பழைய குயவா்பாளையம், வாா்டு 47 சின்னக்கடை தெரு, வாா்டு 48 லெட்சுமிபுரம், வாா்டு 49 காயிதே மில்லத் நகா், வாா்டு 53 செட்டியூரணி, வாா்டு 85 கீழவெளிவீதி, வாா்டு 86 கீரைத்துறை, வாா்டு 87 வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வாா்டு 88 அனுப்பானடி, வாா்டு 89 சிந்தாமணி, வாா்டு 90 கதிா்வேல் நகா் ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெரு விளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.