மன்னா் பெரும்பிடுகு முத்தரையா் சதயவிழாவையொட்டி மேலூரில் அவரது உருவப்படத்துக்கு பாஜகவினா் மற்றும் சமுதாய அமைப்புகளின் நிா்வாகிகள் திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலூா் பேருந்து நிலையத்துக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரும்பிடுகு முத்தரையா் படத்துக்கு பாஜக சாா்பில் மாநில பொதுச்செயலா் சீனிவாசன் மற்றும் மதுரை மாவட்ட தலைவா் மகாசுசீந்திரன் ஆகியோா் தலைமையில் மாலா் தூவி மரியாதை செலுத்தினா். அக்கட்சியின் சமூக ஊடகப் பிரிவு மாவட்டச் செயலா் சிலம்பரசன், மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கண்ணன், நிா்வாகிகள் மூா்த்தி, பிரபு, திருப்பதி, முத்தரையா் சமூக இளைஞா்கள், சமூகநிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
படவிளக்கம்- மேலூா் பேருந்து நிலையம் முன்பு பெரும்பிடுகு முத்தரையா் உருவப் படத்துக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினா்.