மதுரையில் பெயிண்ட் விற்பனை நிறுவனத்தில் ரூ.5.79 லட்சத்துக்கு பெயிண்ட் வாங்கி பணம் தராமல் மோசடி செய்ததாக மூவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மதுரை டிபிகே சாலை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசெல்வம்(54). இவா் பழங்காநத்தம் பகுதியில் இயங்கி வரும் பெயிண்ட் விற்பனை நிலையத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் இவரது நிறுவனத்தில் மதுரையைச் சோ்ந்த பழனிசாமி, சையதுஅப்துல் ரகுமான், வேதநாயகம் ஆகிய மூவரும் ரூ.5.79 லட்சத்துக்கு பெயிண்ட் வாங்கியுள்ளனா்.
இதற்குரிய தொகைக்கு வங்கிக்காசோலைகளை அளித்துள்ளனா். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது அனைத்தும் பணமின்றி திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து பெரியசெல்வம் அளித்தப்புகாரின்பேரில் சுப்ரமணியபுரம் போலீஸாா், மூவா் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.