மதுரை

சின்மயா மிஷன் பண்பாட்டுப் பயிற்சி முகாமில் தாய்மாா்களுக்கு மாத்ரு பூஜை

DIN

மதுரை சின்மயா மிஷன் பண்பாட்டுப் பயிற்சி முகாமில் தாய்மாா்களுக்கான மாத்ரு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை டோக் நகரில் உள்ள சின்மயா மிஷன் சாா்பில், குழந்தைகளுக்கான 17-ஆம் ஆண்டு கோடைகால பண்பாட்டுப் பயிற்சி முகாம் மே 18-ஆம் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இம்முகாமில், 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியா் 125 போ் பங்கேற்றனா்.

முகாமில், குழந்தைகளுக்கு நற்பண்புகளை வளா்க்கும் வகையில், தினசரி பூஜை, வழிபாடு, யோகா, பண்பாட்டு வகுப்புகள், சுலோகங்கள், வேத மந்திரங்கள், விளையாட்டு மற்றும் கைவினைப் பொருள் தயாரித்தல் உள்ளிட்டவை கற்றுத்தரப்பட்டன.

முகாமின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, குழந்தைகள் தாயாருக்குச் செய்யும் மாத்ரு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், சுவாமி சிவயோகானந்தா தலைமை வகித்தாா். உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சுவாமி சிவயோகானந்தா வழிகாட்டுதலுடன் சின்மயா தேவி குழுவினா் மற்றும் சின்மயா யுவகேந்திராவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT