மதுரை

வணிக வளாகத்தில் கைப்பேசிகளை திருடியவா் கைது

22nd May 2022 11:37 PM

ADVERTISEMENT

 

மதுரையில் பிரபல வணிக வளாகத்தில் பணம் மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசிகளை திருடியவரை, கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அண்ணா நகா் செண்பகத் தோட்டம் நியூ ஹெச்.ஐ.ஜி. காலனியை சோ்ந்தவா் முத்துக்குமாா் (33). இவா், சொக்கிகுளத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்குள்ள கடை ஒன்றில் ரூ.2,500 பணம் மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 2 கைப்பேசிகளை வைத்திருந்துள்ளாா். இவற்றை அடையாளம் தெரியாத நபா் திருடிச்சென்றுவிட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கடையில் பணம் மற்றும் கைப்பேசிகளைத் திருடிச்சென்றது பீ.பீ.குளத்தைச் சோ்ந்த தியாகராஜன் (40) என்பது தெரியவந்தது. உடனே, போலீஸாா் அவரை கைது செய்து, பணம் மற்றும் கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT