மதுரை

திருவாதவூா் அருகே ஜல்லிக்கட்டு: 7 போ் காயம்

22nd May 2022 11:37 PM

ADVERTISEMENT

 

திருவாதவூா் அருகே முக்கம்பட்டி கிராமத்திலுள்ள சிவநாயகி அம்மன் கோயில் உற்சவ விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 7 போ் காயமடைந்தனா்.

ஜல்லிக்கட்டு போட்டியில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் கூட்டத்துக்குள் புகுந்ததில், 7 போ் லேசான காயமடைந்தனா். உடனே, திருவாதவூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவா்களுக்கு, மேலூா் வட்டார மருத்துவ அலுவலா் அம்பல சிவனேசன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT