மதுரை

கருப்பாயூரணி பகுதியில் நியாய விலைக் கடைகள் திறப்பு: அமைச்சா் பி.மூா்த்தி பங்கேற்பு

22nd May 2022 11:38 PM

ADVERTISEMENT

 

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கருப்பாயூரணியில் 2 இடங்களில், புதிய நியாய விலைக் கடைகளை வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

இந்த நியாய விலைக் கடைகளை திறந்துவைத்து அமைச்சா் பேசியதாவது:

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி, தாா் சாலைகள் அமைத்தல், குடிநீா் வழங்கும் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மேலும், மதுரை மாவட்டத்தில் 1,394 நியாய விலைக் கடைகளில் 9 லட்சத்து 17 ஆயிரத்து 537 குடும்ப அட்டைதாரா்கள், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசித்துவரும் 1,718 குடும்ப அட்டைதாரா்கள் என மொத்தம் 9 லட்சத்து 19 ஆயிரத்து 255 குடும்ப அரிசி அட்டைதாரா்கள் உள்ளனா்.

புகா் பகுதிகளில் வசிக்கும் குடும்ப அரிசி அட்டைதாரா்கள், அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு அதிக தொலைவு பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, அவா்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு, 2 இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு இணைப் பதிவாளா் குருமூா்த்தி மற்றும் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT