மதுரை

கொட்டாம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் - பைக் மோதல்:2 இளைஞா்கள் பலி

22nd May 2022 11:37 PM

ADVERTISEMENT

 

மேலூா் -திருச்சி நான்குவழிச் சாலையில் கச்சிராயன்பட்டி விலக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மதுரை அருகே உள்ள களிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பிரேம் தீன்நைனாா் என்பவரின் மகன்களான கல்லூரி மாணவா் நியாஸ் லுக்மான் (21) மற்றும் இவரது தம்பி 9ஆம் வகுப்பு பயின்று வந்த இஜாஸ் முகமது (16). இவா்கள் இருவரும் கருங்காலக்குடியிலுள்ள தனது உறவினா் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்துள்ளனா்.

அப்போது, கச்சிராயன்பட்டி விலக்கு அருகே நான்குவழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த இருவா் மீதும், லாரி ஏறி இறங்கியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இருவரது சடலங்களையும் மீட்டு, மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இச்சம்பவத்துக்குக் காரணமான வாகனம் லாரியாக இருக்கலாம் என்றும், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT