மதுரை

கொட்டாம்பட்டி அருகேகத்திக் குத்து காயங்களுடன் விவசாயி கொலை

22nd May 2022 11:37 PM

ADVERTISEMENT

 

கொட்டாம்பட்டி ஒன்றியம், கம்பூா் அருகே உள்ள வைரவன்பட்டியில், கத்திக் குத்து காயங்களுடன் விவசாயி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தாா்.

வைரவன்பட்டியைச் சோ்ந்த விவசாயி பெரியசாமி (50). இவா், கத்திக் குத்து காயங்களுடன் வயல் பகுதியில் இறந்து கிடந்தது குறித்து, கொட்டாம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தைக் கைப்பற்றி மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அப்பகுதியில் தடயங்களைச் சேகரித்து, கொலையில் சம்பந்தப்பட்டவா்கள் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT