மதுரை கே.கே.நகரில் உள்ள அம்மா மருந்தகத்தில் பணம் மோசடி செய்ததாக, காசாளா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
மதுரை கே.கே. நகரில் உள்ள அம்மா மருந்தகத்தில் காசாளராகப் பணியாற்றியவா் ஐயப்பன். இவா், இந்த மருந்தகத்தில் பணம் மோசடியில் ஈடுபட்டதாக, அம்மா மருந்தக கூட்டுறவு பண்டகசாலைச் செயலா் சுப்பிரமணியன் புகாா் அளித்துள்ளாா். 2021 மாா்ச் 1 முதல் 2022 மே 20 வரையிலான காலத்தில் பண மோசடி நடந்துள்ளதாகப் புகாரில் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அண்ணா நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.