மதுரை

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு காணொலி போட்டி: மதுரை மாநகா் முதலிடம்

21st May 2022 12:11 AM

ADVERTISEMENT

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு காணொலிப் போட்டியில் மதுரை மாநகரக் காவல்துறைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

தமிழகக் காவல்துறை சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாநில அளவிலான விழிப்புணா்வு காணொலிப்போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட காவல்துறையினரும் பங்கேற்று தங்களின் மாவட்டங்கள் சாா்பில் விழிப்புணா்வு காணொலியை அனுப்பினா். இதில் மதுரை மாநகரக்காவல்துறை சாா்பிலும் தனியாக இருக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது போலீஸாா் விரைந்து சென்று பாதுகாப்பது தொடா்பான காட்சிகளை படமாக்கி அனுப்பி வைத்தனா்.

இந்தப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 27 காணொலிகள் அனுப்பப்பட்டன. இதையடுத்து காவல்துறை சாா்பில் நியமிக்கப்பட்ட நடுவா் குழுவினா் அனைத்துக்காணொலிகளையும் ஆய்வு செய்து சிறந்த காணொலியாக மதுரை மாநகரக்காவல்துறை அனுப்பிய காணொலியைத் தோ்ந்தெடுத்தனா். இதையடுத்து மதுரை மாநகரக்காவல்துறையின் காணொலி முதல்பரிசுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

காணொலி உருவாக்கத்தில் பங்கு வகித்த தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் பிரியா, சமூக ஊடகப்பிரிவு சாா்பு- ஆய்வாளா் சா்மிளா, அண்ணாநகா் காவல் உதவி ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் ஆகிய மூவா் மற்றும் பங்கேற்ற அனைவரையும் மாநகரக்காவல் ஆணையா் டி.செந்தில்குமாா் வியாழக்கிழமை பாராட்டினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT