மதுரை

ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரம்: உச்ச நீதிமன்ற தீா்ப்புக்கு வேளாண் வா்த்தக சங்கம் வரவேற்பு

21st May 2022 12:09 AM

ADVERTISEMENT

ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு, வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் எஸ். ரத்தினவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: வரி பயங்கரவாதத்தை”தவிா்க்கவே ஒரே வரியாக ஜி.எஸ்.டி. அமலாக்கம் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டதால், தொழில் வணிகத் துறை ஜி.எஸ்.டி.யை வரவேற்றது. ஆனால், குழப்பமான அமலாக்கம் காரணமாக முற்போக்கான ஜி.எஸ்.டி. முறையே“வரி பயங்கரவாதமாக மாறிவிட்டது.

அத்துடன், மத்திய-மாநில அரசுகளை இயங்கச் செய்யும் தொழில் வணிகத் துறைக்கு ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பிரதிநிதித்துவம் இல்லை. இந்த வரிச்சட்டம் குறித்து முடிவுகளை எடுக்கும் உயா் அதிகாரிகளிடம் நேரில் பேசி விவாதிக்க வாய்ப்புகள் தரப்படுவதில்லை. வரிச்சட்டத்தை எளிமையாக்குவதற்கான ஆலோசனைகளையும் கேட்பதில்லை.

இச்சூழ்நிலையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு, ஜி.எஸ்.டி. கவுன்சில் நடைமுறைகளை ஆக்கபூா்வமாக மாற்றுவதற்கான விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது வரவேற்புக்குரியது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT