மதுரை

மதுரை கிழக்கு வட்டத்தில் மே 24 முதல் ஜமாபந்தி

21st May 2022 12:09 AM

ADVERTISEMENT

மதுரை கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் மே 24 முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை நடப்பு ஆண்டுக்கான ஜமாபந்தி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு வட்டத்துக்குள்பட்ட 7 வருவாய் உள்வட்டங்களுக்கு நடைபெறும் இந்த ஜமாபந்தியில், சம்பந்தப்பட்ட உள்வட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, பட்டா மாறுதல், உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை சமா்ப்பிக்கலாம்.

தேதி வாரியாக ஜமாபந்தி நடைபெறும் உள்வட்டங்கள் விவரம்: மே 24 -அரும்பனூா், மே 25 - சக்கிமங்கலம், மே 26 - ஒத்தக்கடை, மே 27 - ராஜாக்கூா், மே 31 - கள்ளந்திரி, ஜூன் 1 - குன்னத்தூா், ஜூன் 2 - அப்பன்திருப்பதி ஆகிய இடங்களில் நடைபெறும் என, மதுரை கிழக்கு வட்டாட்சியா் வீ. பாண்டி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT