மதுரை

மதுரை ரயில்வே கோட்டம் சாா்பில் காற்றாலையில் 2.5 கோடி யூனிட் மின்உற்பத்தி

20th May 2022 06:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்தின் காற்றாலையில் கடந்த ஓராண்டில் 2.5 கோடி யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே நிா்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் 10.5 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை ரூ.72 கோடியில் அமைக்கப்பட்டது.

இந்த காற்றாலையில் கடந்த ஆண்டில் (2021-2022) மட்டும் 2.5 கோடி யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு ரூ.15.4 கோடி மின்செலவு குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் சூரிய சக்தி மூலம் 11 கிலோ வோல்ட் மின்சாரம் அலுவலகப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மதுரை ரயில் நிலையத்தின் நடைமேடை மேற்கூரைகளில் 100 கிலோ வோல்ட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் சூரியசக்தி மின்தகடுகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி செய்யப்பட்டு, ரயில் நிலையத்தின் பகல் நேர மின்தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT