மதுரை

மதுரை என்எம்ஆா் சுப்பராமன் நினைவு உறைவிடப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

20th May 2022 06:02 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை என்எம்ஆா் சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப் பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளியின் செயலா் இரா.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் மூலம் மதுரை டாக்டா் தங்கராஜ் சாலையில் என்எம்ஆா் சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. ஆதிதிராவிடா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்காக இயங்கி வரும் இங்கு தங்கும் வசதி, உணவு, சீருடை, மருத்துவம், பாடநூல்கள், தரமான கல்வி என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது பள்ளியில் 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை சோ்க்கை நடைபெற்று வருகிறது. தங்கள் குழந்தைகளை சோ்க்க விரும்பும் பெற்றோா் பள்ளியைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT